''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்''? - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை!

''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்''? - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை!

''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்''? - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை!
Published on

கைக்குழந்தையுடன் அடகு கடைக்குச் சென்று 'குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்'? என்று கேட்ட தந்தையால் பெரிய பரபரப்பே ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகு கடைக்கு தன் கைக்குழந்தையோடு ஸ்லோகும் என்பவர் சென்றுள்ளார். அடகு கடையில் இருந்த ரிச்சர்ட் என்பவரை சந்தித்த ஸ்லோகும், தன் கைக்குழந்தையைக் காட்டி 'இவனால் எனக்கு பெரிய பயன் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்'? எனக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன ரிச்சர்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் தான் விளையாட்டாக நகைச்சுவை செய்ததாகவும், அது புரியாமல் அடகு கடைக்காரர் போலீசை அழைத்துவிட்டார் என்றும் ஸ்லோகும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அடகு கடைக்காரர் ரிச்சர்ட், ''இது எவ்வளவு முக்கியமான விஷயம். ஸ்லோகும், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இதனை என்னால் அடகு வைக்க முடியுமா? என்று சிரித்துக்கொண்டு கேட்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்

அடகு கடைக்காரருக்கு நகைச்சுவையே புரியவில்லை என ஸ்லோகுன் தெரிவித்துள்ளார். மேலும் ''நான் செய்த காமெடியை அடகு கடைக்காரர் புரிந்துகொள்ளவே இல்லை. போலீசுக்கு போன் செய்துவிட்டார்'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதில் எந்த நகைச்சுவையும் இல்லை. இது மரியாதைக்குரிய வியாபாரம் என்று ரிச்சர்ட் பதில் அளித்துள்ளார்.

குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்ய போலீசார் ஸ்லோகுனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த புகார் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com