ஹவாய் தீவு முழுவதும் சூரிய சக்தி மின்சாரம்: டெஸ்லா நிறுவனம் சாதனை

ஹவாய் தீவு முழுவதும் சூரிய சக்தி மின்சாரம்: டெஸ்லா நிறுவனம் சாதனை

ஹவாய் தீவு முழுவதும் சூரிய சக்தி மின்சாரம்: டெஸ்லா நிறுவனம் சாதனை
Published on

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்த டெஸ்லா நிறுவனம், அடுத்த சாதனையாக அமெரிக்க தீவான ஹவாயில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்திப் பூங்காவை நிறுவியுள்ளது. இதன்மூலம் தீவு முழுவதுக்கும் தேவையான மின்சாரத்தை டெஸ்லா பூர்த்தி செய்துள்ளது.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் 2,500 கிமீ நீளத்திற்கு பரந்து விரிந்த தீவுக்கூட்டம் ஹவாய். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இந்தத் தீவுக்கூட்டத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய டெஸ்லா நிறுவனம் மிகப் பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ஹவாய் தீவின் கவ்வாய் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் டெஸ்லா நிறுவனம் சோலார் பூங்காவை அமைத்துள்ளது. இந்தப் பூங்காவில் 54,978 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 272 பவர்பேக்-கள் மூலம் ஹவாய் தீவில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என 35,000 மின் இணைப்புதாரர்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மிகப்பெரிய சோலார் பூங்காவிற்கு ‘சோலார் சிட்டி’ என பெயரிட்டுள்ளது.

பவர்பேக்குகளில் சேமிக்கப்படும் மின்சாரம் இந்த தீவில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு மின்பாதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ள டெஸ்லா நிறுவனம், கவ்வாய் தீவின் நிர்வாகத்திடம் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் வேகமாக முன்னேறிவரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சோலார் தயாரிப்பிலும் முன்னணி இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com