ஹவாய் தீவு: அதீத சீற்றத்தில் மவுனா லாவோ எரிமலை! ஆறாக ஓடும் தீக்குழம்புகள்!

ஹவாய் தீவு: அதீத சீற்றத்தில் மவுனா லாவோ எரிமலை! ஆறாக ஓடும் தீக்குழம்புகள்!
ஹவாய் தீவு: அதீத சீற்றத்தில் மவுனா லாவோ எரிமலை! ஆறாக ஓடும் தீக்குழம்புகள்!

ஹவாய் தீவில் சீற்றத்துடன் கொந்தளிக்கும் மவுனா லாவோ எரிமலை தொடர்ந்து தீக்குழம்புகளை வெளியிட்டு வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான மவுனா லாவோ எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் விடாமல் எரிமலை கொந்தளித்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தீக்குழம்பை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது.

தற்போது எரிமலை பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையை நோக்கி தீக்குழம்பு ஓடுவதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அந்த சாலையை தீக்குழம்பு ஆறு எட்டலாம் என்பதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com