ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரொஹானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இத்தகவலை அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரொஹானியும், அவரை எதிர்த்து மத அடிப்படைவாதியான ரைஸியும் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபரான ஹசன் ரொஹானி வெற்றி பெற்றார் என அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த இப்ராகிம் ரைஸி, வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், ரூஹானியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.