ஹமாஸ் விஷயத்தில் பொய் சொன்னாரா அமெரிக்க அதிபர்...? என்ன சார் இதெல்லாம்..!

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்முகநூல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இதன்மூலம் சண்டை நடக்க வாய்ப்பிருப்பதால் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஹமாஸ் படைக்குழு இஸ்ரேலின் கிப்புஸில் செய்த அத்துமீறல்கள் பற்றிய வீடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அதிபர் ஜோ பைடன்
"ஹமாஸ் மனிதர்களே இல்லை".. கிப்புஸ் கோர தாண்டவத்தில் பிழைத்தவர்கள் கண்ணீர்!

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் நிகழ்த்திய கொடூரங்கள் பற்றி மீடியாக்களிடம் பேசுகையில், "நான் ஒரு நாளும் பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை வெட்டுவதை பார்ப்பேன் என நினைத்ததில்லை" என்றார்.

அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்முகநூல்

சர்வதேச அளவில் இது பெரும் புயலைக் கிளப்பியது. குழந்தைகளைக் கொன்றதை ஹமாஸ் குழுவினர் ஏற்கெனவே மறுத்த நிலையில், அமெரிக்க அதிபர் வெளிப்படையாக அதைத் தான் பார்த்ததாகச் சொன்னது பலரைக் கொதிப்படையச் செய்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்துக்கு, வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்திருக்கிறது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், "அமெரிக்க அதிகாரிகளோ, அமெரிக்க அதிபரோ அப்படி எந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் இதுவரை பார்க்கவில்லை.

அதிபர் ஜோ பைடன்
"இஸ்ரேலுக்கு நாங்க இருக்கோம்.." அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

இஸ்ரேல் மீடியாக்கள் சொல்வதையும், இஸ்ரேல் பிரதமரின் செய்தியாளர்கள் சொல்வதையும் வைத்து ஜோ பைடன் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்" என்றார்.

அமெரிக்க அதிபரின் பொறுப்பற்ற பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com