
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் அளித்துள்ளது. அத்துடன் நடிகர் சங்க தலைவர் விஷால் பத்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோன்று திரைப்பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனர். மேலும் தமிழ் அமைப்புகளும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிதி திரட்டி வருகின்றன. இவை மட்டுமின்றி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் நடந்த நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அமெரிக்காவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் அகாடமி என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.