\
எங்கள் மகனின் நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது: ஹாரி - மேகன் மார்க்கெல்

எங்கள் மகனின் நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது: ஹாரி - மேகன் மார்க்கெல்

எங்கள் மகனின் நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது: ஹாரி - மேகன் மார்க்கெல்
Published on: 

இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக சொல்லி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறினர் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கெல் தம்பதியர். தற்போது இருவரும் மேகனின் பூர்விகமான அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் இருவரும் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக பிரிட்டிஷ் அரச குடும்ப மகாராணி எலிசபெத் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், பிரபல அமெரிக்க தொலைகாட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவிடம் தங்களது அரச குடும்ப வாழ்க்கை குறித்த நினைவுகளை நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளனர் தம்பதியர் இருவரும். 

“எங்களது மகன் ஆர்ச்சி நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது. அவனுக்கு எந்தவித அரச குடும்ப பாதுகாப்பும் கிடைக்க கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருந்தனர். அது எங்களுக்கு சங்கடத்தை கொடுத்தது. மகாராணி மீது நாங்கள் இருவரும் மரியாதை கொண்டுள்ளோம்” என் இருவரும் தெரிவித்துள்ளனர். 

அதோடு பொருளாதார ரீதியாக தாங்கள் கைவிடப்பட்டது மற்றும் தற்கொலை எண்ணம் மேகனுக்கு வந்தது என அனைத்தையும் இருவரும் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com