“ஹமாஸின் சுரங்கப்பாதைகள் சிலந்தி வலைகள் போல் இருக்கு; மெத்தை வசதி கூட..” - ரிலீஸ் ஆன பிணைக்கைதிகள்!

சுரங்கப்பாதைக்குள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவை தூய்மையாக இருந்ததுடன் மெத்தை உள்ளிட்ட வசதிகளும் தரப்பட்டதாகவும் பிணைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்
இஸ்ரேல்pt web

“ஹமாஸ் அமைப்பினர் காஸா பகுதியில் நிலத்தடிக்குள் அமைத்துள்ள சுரங்கப்பாதைகள் சிலந்தி வலைகள் போல் இருந்தன” என்று விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் படையினர் 200க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களில் ஏற்கெனவே 2 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 மூதாட்டிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் திரும்பியுள்ள அவர்கள் ஹமாஸ் படையினர் தங்களை சிறப்பாக நடத்தினர் எனதெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் - இஸ்ரேல்
ஹமாஸ் - இஸ்ரேல் Twitter

சுரங்கப்பாதைக்குள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவை தூய்மையாக இருந்ததுடன் மெத்தை உள்ளிட்ட வசதிகளும் தரப்பட்டதாகவும் பிணைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் நலம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்ததாகவும், மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நேற்று ஒரே இரவில் 140 பேரை இஸ்ரேல் படைகள் வான்வழித்தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய காஸாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசும் காட்சியும், உள்ளே இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. காஸாவில் இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் எரிபொருள் இருக்கும் என அங்கு பணியாற்றி வரும் ஐநா வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு எரிபொருள் விநியோகம் இல்லாவிட்டால் மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதுடன், நிவாரண பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதிலும் சிக்கல் ஏற்படும் என அவர் கூறினார்.

காஸாவில் கடந்த 18 நாட்களில் 12 ஆயிரம் டன் வெடிமருந்துகள் வீசப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

காஸாவில் கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ள ஹமாஸ் இதன் மூலம் 12 ஆயிரம் டன் வெடிமருந்துகள் தங்கள் பகுதியில் விழுந்துள்ளதாக கூறியுள்ளது.

இது ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இருந்த வெடிமருந்துகளுக்கு சமம் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காஸா பகுதியில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் 400 முறை வான்வழித்தாக்குதல்கள் நடத்தியதாகவும் இதில் குறைந்தபட்சம் 700 பேர் இறந்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இதுவரை 6 ஆயிரத்து 55 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 ஆயிரத்து 143 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் - சுரங்கப்பாதை
ஹமாஸ் - சுரங்கப்பாதைபுதிய தலைமுறை

இதற்கிடையே தங்களுக்கு எரிபொருள் கிடைக்காவிட்டால் இன்று இரவோடு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என ஐநா தெரிவித்துள்ளது. ஆனால், காஸாவில் ஹமாஸ் படையினர் 5 லட்சம் லிட்டர் எரிபொருளை பதுக்கிவைத்துள்ளதாகவும் அதை கேட்குமாறும் ஐநா படையினரை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவில் கடந்த 18 நாட்களில் 12 ஆயிரம் டன் வெடிமருந்துகள் வீசப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

காஸ்ஆவில் கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ள ஹமாஸ் இதன் மூலம் 12 ஆயிரம் டன் வெடிமருந்துகள் தங்கள் பகுதியில் விழுந்துள்ளதாக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com