“ஈரான் உதவியால் ஹமாஸ் இம்மாதிரி செயல்படுகிறது” சர்வதேச விவகார ஆய்வாளர் கார்த்திகேயன்

“ஈரான் உதவியாலும் தூண்டுதலினாலுமே ஹமாஸ் இம்மாதிரி செயல்படுகிறது” என சர்வதேச விவகார ஆய்வாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள், கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். போர் சூழல் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்வதேச விவகார ஆய்வாளர் கார்த்திகேயன் புதிய தலைமுறைக்கு தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ஹமாஸ் நீண்டகாலமாகவே இத்தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. 1950களில் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனாலும் அவர்களுடன் வெளியுறவு ரீதியிலான உறவை வைத்துக்கொண்டது 1992-ஆம் ஆண்டில்தான்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பல விவரங்கள் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com