இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சராக இருந்த ஜவாத் அபு ஷமாலாவை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான மோதல் 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இரு பகுதிகளை சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2400-ஐ கடந்துள்ளது. இரு பிரிவுகள் இடையிலான மோதலால் காஸாவில் அப்பாவி மக்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சராக இருந்த ஜவாத் அபு ஷமாலாவை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்தவர் ஜவாத் அபு ஷமாலா. அந்நாட்டின் நேரப்படி, இரவில் விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முழு விபரமும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com