
ஹமாஸ் படை பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில், “வரும் நாட்களில் பல வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். காஸாவில் தரைவழி தாக்குதலின்போது இஸ்ரேல் ராணுவத்துடன் மூன்று நிலைகளில் ஹமாஸ் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.
அத்துடன் இஸ்ரேலிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் 22 ராணுவ வாகனங்களை அழித்திருக்கிறோம். ஆசிஃப் என்ற ஏவுகணையை பயன்படுத்தி தங்கள் கடற்படை பதிலடி கொடுத்துள்ளோம்” என்றார்.
எனினும் பிணைக் கைதிகளாக உள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. அதேநேரம் தங்கள் படைகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக கூறியதை இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது.