ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை முதல் முறையாக காசாவிற்குள் மோதல்..!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய போரினால் தங்களின் அடிப்படை தேவைகளை இழந்தும் அங்கிருந்து தப்பிக்க முடியாமலும் அப்பாவி மக்கள் அவதியுற்றுவருகின்றனர்.இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள் முதல் முறையாக காசாவிற்குள் மோதலை துவங்கியுள்ளனர்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள்
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள்facebook

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள் முதல் முறையாக காசாவிற்குள் மோதலை மேற்கொண்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள்
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள்முகநூல்

போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் இஸ்ரேலிய துருப்புக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தரை படை துருப்புக்கள்
தொடர்ந்து நிலைகுலையும் ஹமாஸ்.. இஸ்ரேல் தாக்குதலில் மீண்டும் முக்கியத் தலைவர் பலி!

ஹமாஸ் இது குறித்து கூறுகையில், ”தனது போராளிகள், இரண்டு இஸ்ரேலிய இராணுவ புல்டோசர்களையும் ஒரு டாங்கிகளையும் பதுங்கியிருந்து அழித்தனர்,” என்று அறிக்கையில் கூறுகிறது. இதனால் இஸ்ரேலிய துருப்புக்கள் தங்கள் வாகனங்கள் இல்லாமல் இஸ்ரேலுக்குள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போதுள்ள நிலை மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரைப்படை தாக்குதலை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com