150 பேர் இறப்பார்கள் என்பதால் ஈரான் மீதான தாக்குதலை தடுத்தேன் - ட்ரம்ப் ட்வீட்

150 பேர் இறப்பார்கள் என்பதால் ஈரான் மீதான தாக்குதலை தடுத்தேன் - ட்ரம்ப் ட்வீட்
150 பேர் இறப்பார்கள் என்பதால் ஈரான் மீதான தாக்குதலை தடுத்தேன் - ட்ரம்ப் ட்வீட்

ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு நான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் அந்நாட்டின் மீது முழுப் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் ஈரானுடன், வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கும் தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்தார். இது ஈரான் - அமெரிக்கா அரசுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியது.  

இதனையடுத்து ஹார்மஸ்கான் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான உளவு பார்க்கும் ஆளில்லா விமானம் ஒன்று அனுமதியின்றி பறந்ததாகவும் அதனை தங்கள்‌‌ நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை அமெரிக்காவும் உறுதி செய்தது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது'' என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஈரானுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தவிருந்ததை நான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து நாங்கள் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அதன்பின்னர் ராணுவ ஜெனரலிடம் இத்தாக்குதலில் எத்தனை மக்கள் உயிரிழப்பார்கள் எனக் கேட்டேன் அதற்கு அவர் 150 மக்கள் உயிரிழப்பார்கள் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த பதில் தாக்குதலை தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு நான் நிறுத்த உத்தரவிட்டேன். 

இந்த விவகாரத்தில் நாங்கள் அவசரப்பட போவதில்லை. ஏனென்றால் எங்கள் ராணுவம் தான் உலகிலேயே தலைச்சிறந்த ராணுவம். ஈரான் அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த உலக நாடுகளுக்கு எதிராகவோ அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com