சிங்கப்பூரின் முதல் பெண் ‌அதிபராகிறார்‌ ஹலிமா

சிங்கப்பூரின் முதல் பெண் ‌அதிபராகிறார்‌ ஹலிமா

சிங்கப்பூரின் முதல் பெண் ‌அதிபராகிறார்‌ ஹலிமா
Published on

சிங்கப்‌பூரின் முதல் பெண் அதிபராக மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிங்கப்பூரில் இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் முன்னாள் சபாநாயகரான ஹலிமா யாகூப் ‌உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் போட்டியிட்ட பலரில் மலாய் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஹலிமா யாகூப் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அந்நாட்‌டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை ஹலிமா யாகூப் பெறுகிறார்.

அதேசமயம் தேர்தலை சந்திக்காமல் நேரடியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com