குருட்டுத்தன்மையுடன் அடுத்தடுத்து இறந்த பூனைகள்.. அமெரிக்காவில் H5N1 பறவைக்காய்ச்சல் அபாயம் தீவிரம்

அமெரிக்காவில் இத்தகைய வைரஸ் பாதிக்கப்பட்ட பாலை குடித்ததால், பூனைகள் குருட்டுத்தன்மை அடைந்து இறந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
cat
catPT

சில மாதங்களுக்கு முன் தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் (brown skuas) இறந்ததை அடுத்து, அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர்.

cat
”கொரோனோவை விட 100 மடங்கு பாதிப்பு” - தீவிரமடையும் பறவைக்காய்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

இந்நிலையில், அமெரிக்காவில் ஆடு மாடுகளுக்கிடையே பறவைக்காய்ச்சல் பரவி வருவதாகவும், தொற்று பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 இருப்பதாகவும் ஆகவே கறந்த பாலை உட்கொள்ளவேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இத்தகைய வைரஸ் பாதிக்கப்பட்ட பாலை குடித்ததால், பூனைகள் குருட்டுத்தன்மை அடைந்து இறந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் இரண்டு நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளது. மேலும் அப்பண்னையில் பல பூனைகளும் நோய்வாய்ப்பட்டிப்பதை அறிந்த அப்பண்ணை உரிமையாளர், நோய் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளார். அதன்படி இறந்து போன பூனைகளை பரிசோத்தித்த நோய் கட்டுப்பாடு வாரியம், H5N1 வைரஸ் தாக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட பச்சைப்பாலை பூனைகள் உட்கொண்டதால் பூனைகளுக்கும் H5N1 பாதிப்பு ஏற்பட்டு, இறந்ததாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

cat
அண்டார்டிகா - பென்குயின்களுக்கு பறவைக்காய்ச்சல்...!

இது குறித்த விரிவான விசாரணையில், பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் சாப்பிட்ட பிறகு பூனைகளை வைரஸ் தாக்கியுள்ளதாகவும், இதனால் பூனைகள் கண்பார்வை இழந்ததுடன், நுரையீரல், மூளை, இதயம் உட்பட பல உறுப்புகளை வைரஸ் தீவிரமாக தாக்கியுள்ளதாக நெக்ரோப்ஸி முடிவுகள் சுட்டிக்காட்டின.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பறவைக்காய்ச்சல் உலகமக்களிடையே கவலையை அதிகரித்துவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com