விசா விதிமீறல்: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி
அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டவருக்கான ஹெச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகளை இந்திய நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் காக்னிஸான்ட் ஆகியவை மீறுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா வழங்கும் ஹெச்1பி விசாக்களில் பெரும்பகுதியை இந்த மூன்று நிறுவனங்கள் பெறுவதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிக விண்ணப்பங்களை குலுக்கல் முறையில் இடம்பெறச் செய்வதன் மூலம் பெரும்பகுதி விசாக்களை இந்நிறுவனங்கள் பெறுவதால், மற்ற சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுமே அதிக அளவிலான விசாக்களை பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் சராசரியாக அமெரிக்க பொறியாளார்கள் பெறுவதை விட மிகக் குறைவான ஊதியமே பெறுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.