புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பரிதாப பலி!

புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பரிதாப பலி!

புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பரிதாப பலி!
Published on

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வங்கியில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணம் புளோரிடா. இங்குள்ள செப்ரிங் நகரில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் புகுந்த 21-வயது இளைஞர் ஒருவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கி நின்றவர்கள் மீது சரமாரியாகச் சுட்டார்.  இந்த எதிர்பாராத தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் தரையில் படுத்து தப்பினர். உயிரிழந்தவர்கள் யார் என்பது  உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அங்கு குவிந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர், பின்னர் போலீசாரிடம் சரணடைந்தார். அவர் பெயர் ஸீபன் சேவியர் (Zephen Xaver). 21 வயது வாலிபரான இவர், சால்ட்லேக் நகரில் உள்ள ஸ்டீவன்ஸ் ஹேனர் கல்லூரி மாணவர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின் றனர். 

இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com