ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன 'How Dare You' 

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன 'How Dare You' 
ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன 'How Dare You' 

உலக தலைவர்களை பார்த்து 16 வயது சிறுமி கேட்ட 'How Dare You'  என்ற கேள்வி இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னேடுத்து வருபவர் சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை” என்ற போராட்டத்தின் மூலம் உலகளவில் பிரபலமான இவர், பருவநிலை பாதுகாப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று  ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார்

சீர்க்கெட்டு கொண்டிருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் உங்களால் அமைதியாக எப்படி இருக்க முடிகிறது? உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப்பருவத்தையும் திருடிவிட்டீர்கள் என வார்த்தைகளால் பொரிந்து தள்ளினார். 

ஐநாவில் கிரேட்டா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் உலக தலைவர்களை பார்த்து ஆங்கிலத்தில் கேட்ட  'How Dare You' என்பதை என்ற கேள்வி இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. #HowDareYou என்ற ஹேஸ்டேக்கின் மூலம் பலரும் கிரேட்டாவை ஆதரித்தும், அவரைப் புகழ்ந்தும் பதிவிட்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com