ரஷ்ய பகுதிகள் 'ப்ளர்' செய்யப்பட்டதா? - கூகுள் மேப் விளக்கம்

ரஷ்ய பகுதிகள் 'ப்ளர்' செய்யப்பட்டதா? - கூகுள் மேப் விளக்கம்

ரஷ்ய பகுதிகள் 'ப்ளர்' செய்யப்பட்டதா? - கூகுள் மேப் விளக்கம்
Published on

ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் 'ப்ளர்' செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழை பொழிந்ததில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. எனினும் இச்சேவை ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்படவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவில் கனரக ஆயுதங்கள் நிறைந்து இருப்பதால் ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் 'ப்ளர்' செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்ட ஓர் புகைப்படமும் இந்த தகவலுடன் பரவி வந்தது. இதனையடுத்து கூகுள் மேப் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதில் ரஷ்யாவின் எந்த பகுதியையும் கூகுள் மேப் மறைக்கவோ அல்லது ப்ளர் செய்யவோ இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ரஷ்யாவின் முயற்சி வெற்றி பெறாது - உக்ரைன் திட்டவட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com