\
களவுபோன பைக்குகளை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்ஸ்: எப்படி தெரியுமா?

களவுபோன பைக்குகளை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்ஸ்: எப்படி தெரியுமா?

களவுபோன பைக்குகளை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்ஸ்: எப்படி தெரியுமா?
Published on

பொதுவாக பெரும்பாலானோர் வீட்டு தோட்டங்களில் கண்களை கவரும் பூச்செடிகள் மற்றும் பசுமை மாறாத இலைகள் கொண்ட அழகு செடிகளும் தான் இருக்கும். ஆனால் பிரிட்டன் நாட்டில் ஒரு வீட்டின் தோட்டத்தில் மலைபோல நூற்றுக்கணக்கிலான விதவிதமான பைக்குகள் நின்று அலங்கரித்துள்ளன. தற்போது அந்த தோட்டத்தின் படம் வைரலாகி உள்ளது.  

அந்த நாட்டின் ஆக்ஸ்போர்டு பகுதியில் அமைந்துள்ள பங்களா ஒன்றில் இந்த வினோதம் நடைபெற்றதை கூகுள் மேப்பின் சாட்டிலைட் படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த பங்களாவில் போலீசார் அதிரடி ரைடு மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில் அந்த பைக்குகள் அனைத்தும் களவாடப்பட்டு வந்தது என்ற விவரம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அங்கிருந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் அந்த பங்களா வீட்டின் தோட்டத்தை தங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்க்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com