பீட்சாவுக்கு பிரத்யேக Puzzle கேம் போட்டு கொண்டாடும் கூகுள் டூடுள்! காரணம் என்ன?

பீட்சாவுக்கு பிரத்யேக Puzzle கேம் போட்டு கொண்டாடும் கூகுள் டூடுள்! காரணம் என்ன?
பீட்சாவுக்கு பிரத்யேக Puzzle கேம் போட்டு கொண்டாடும் கூகுள் டூடுள்! காரணம் என்ன?

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை ‘கூகுள்’ தேடுபொறி மூலமாக தேடி தெரிந்து கொள்வது வழக்கம். உலக அளவில் மக்களிடையே மிகவும் பிரபலமான சில முக்கியமான நாட்களின் தனிச்சிறப்பை முன்னிட்டு ‘டூடுள்’ போடுவது உண்டு. 

அந்த வகையில் இன்று உலக மக்களிடையே மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பீட்சாவுக்கு டூடுள் போட்டு கொண்டாடியுள்ளது. அதுவும் Puzzle கேம் வடிவில் இந்த டூடுலை பகிர்ந்துள்ளது கூகுள். 

கடந்த 2007 வாக்கில் இதே நாளில் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இத்தாலியில் நாட்டின் பிரபல உணவான பீட்சா சேர்க்கப்பட்டுள்ளது. அதனை கொண்டாடும் நோக்கில் இதை கூகுள் செய்துள்ளது. 

உலக அளவில் மக்களிடம் மிகவும் பிரபலமான 11 வகையான பீட்சா டாப்பிங்கை இந்த டூடுள் கேம் கொண்டுள்ளது. அதாவது Margherita Pizza, Pepperoni Pizza, White Pizza, Calabresa Pizza, Muzzarella Pizza, Hawaiian Pizza, Magyaros Pizza, Teriyaki Mayonnaise Pizza, Tom Yum Pizza, Paneer Tikka Pizza, Dessert Pizza என 11 வகையான பீட்சா இந்த விளையாட்டில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com