google
googlegoogle

வெள்ளி விழா நாயகன்.. 25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

கடவுளைப் போல நம்பும் அளவுக்கு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது, இந்த வெள்ளி விழா நாயகன். நாம் தினசரி பயன்படுத்தும் இணையதளத்தில் இன்றியமையாதது கூகுள்.
Published on

நவீனமயமாகிவிட்ட உலகில் இணையதளங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் இணைந்துள்ள கூகுளுக்கு இன்று வெள்ளிவிழா.

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. கடவுளைப் போல நம்பும் அளவுக்கு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது, இந்த வெள்ளி விழா நாயகன். நாம் தினசரி பயன்படுத்தும் இணையதளத்தில் இன்றியமையாதது கூகுள்.

எந்த சந்தேகம் தோன்றினாலும், எதை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினாலும் அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த மேம்படுத்தப்பட்ட தேடுபொறியே. அவ்வாறாக இருக்கும் கூகுள், இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

செர்கே ப்ரின் மற்றும் லாரி பேஜ் இருவரால் 1998ஆம் ஆண்டு இதே நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள், இன்று இணையதள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

உலகம் முழுவதும் 430 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை வைத்திருக்கும் கூகுள், ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் வரைபடம் மூலம் வழி சொல்வதில் இருந்து பலரின் வாழ்க்கைக்கே வழி காட்டவும் உதவும் கூகுளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பெருமை கொள்வோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com