பயனர்களுக்குத் தெரியாமல் லொகேஷன் விவரம்: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7000 கோடி அபராதம்!

பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் குறித்த விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள்
கூகுள்புதிய தலைமுறை

தேடுபொறி நிறுவனங்களுள் முக்கியமானதாக கருதப்படும் கூகுள் (goolgle), பயனர்களுக்குத் தெரியாமல், அவர்களின் இருப்பிடம் (location) குறித்த விவரங்களைச் சேகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சாண்டா கிளாரா கவுண்டி உயர் நீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இதுதொடர்பான விசாரணையை கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கையிலெடுத்தது. இதன் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ” 'பயனர்கள் தங்கள் பயன்பாட்டை நிறுத்தியவுடன், அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படுவது நிறுத்தப்படும்' என்ற உத்தரவாதத்தை கூகுள் நிறுவனம் வழங்குகிறது. ஆனால், அதன் செயல்பாடு, அதற்கு நேர்மாறாக, தனது சொந்த வணிக லாபத்துக்காக பயனர்களின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ”கூகுளின் இத்தகைய செயல், ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான தீர்வுக்கு கூகுள் பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறு நேர்ந்ததற்காக கூகுள் நிறுவனத்துக்கு 93 மில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது" என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேம்படுத்தப்பட்ட புராடெக்ட் கொள்கை மூலம் இதற்கு தீர்வு கண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த அபராதத்தை செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது. பயனர்களுக்கு தெரியாமல் தரவுகளை சேகரித்த விவகாரத்தில் மெட்டா நிறுவனமும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com