\
google
google pt web

கூகுளுக்கு ரூ.9,500 கோடி அபராதம்.. ஐரோப்பிய யூனியன் அதிரடி! என்ன காரணம்?

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை மீறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய ஆணையம் .
Published on
Summary

ஐரோப்பிய யூனியன், கூகுளின் கூகுள் பிளே சேவைகள் போட்டியாளர்களை பாதிக்கும் வகையில் வாடிக்கையாளர்களை ஈர்த்ததாக குற்றம் சாட்டி, ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆண்டிராய்டு தளத்தை தவறாக பயன்படுத்தியதற்காக முன்பே ரூ.38,000 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது.

கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தனது கூகுள் பிளே செயலி போட்டியாளர்களை பாதிக்கும் வகையில் வாடிக்கையாளர்களை வணிக நெறிகளுக்கு மாறாக ஈர்த்ததாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

google play
google play web

ஆண்டிராய்டு இயங்கு தளத்தை வணிக நெறிகளுக்கு மாறாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக ஏற்கெனவே கூகுள் 38000 கோடி ரூபாய் அபராதத்திற்கு உள்ளாகியிருந்தது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் வணிகங்களையும் நுகர்வோரையும் எதிர்மறையாக பாதிக்கும் என கூகுள் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் விமர்சனங்கள் மற்றும் பதிலடி வரி அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களை முடக்குவதைத் தடுப்பதில் ஐரோப்பா எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பதை இந்த அபராதம் காட்டுகிறது.

google
விண்வெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா..? சீனா செய்த ஆராய்ச்சி.. முடிவு என்ன தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com