\
Google Fined €403 Million by EU for Privacy Violations
GoogleReuters

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்.. பயனர்களின் தரவுகள் திருட்டு? ஐரோப்பிய யூனியன் அதிரடி!!

ஐரோப்பிய யூனியனில் தனியுரிமை விதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 403 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்து 435 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Published on

கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடத் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் செயல்படும் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையம் 403 மில்லியன் யூரோ (Euro) அபராதம் விதித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்ற கேள்வியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

தரவுத் திருட்டு
தரவுத் திருட்டுReuters

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூகுள் நிறுவனம், ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறைக்கு மாறாக, பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் இருப்பிட தகவல்களை ரகசியமாக சேகரித்ததாக கடந்த 2018-ம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமையகம் அயர்லாந்தில் இருப்பதால், அந்த நாட்டின் தரவு பாதுகாப்பு மையம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டது.

இந்த வழக்கில், 2018-ம் ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR ( General Data Protection Regulation) எனப்படும் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல், 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கூகுள் கையாண்ட தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த விசாரணையின் மூலம், பயனர்களின், 'வெப் ஆப் ஆக்டிவிட்டி' எனப்படும், டிஜிட்டல் டைரி மற்றும் இருப்பிட வரலாறு மூலம் தகவல்கள் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

Google Fined €403 Million by EU for Privacy Violations
துபாய் மன்னரின் சகோதரர் மரணம்.. அதிர்ச்சியடைந்த உலக நாடுகள்.. நடந்தது என்ன?

மேலும், கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களை கையாள்வதில் சட்டபூர்வமான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என அயர்லாந்து தரவு கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் தான், ஐரோப்பிய யூனியனில் தனியுரிமை விதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 403 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்து 435 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்துடன், அடுத்த 6 மாதங்களுக்குள் இருப்பிடத் தகவல்களை கையாளும் நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR விதிகளுக்கு ஏற்ப மாற்றவும் கூகுளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Google
GoogleReuters

எனினும், இதற்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், இந்த வழக்கு ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்ட பழைய கொள்கைகள் தொடர்பானது எனவும் 2019-ம் ஆண்டு முதல், இருப்பிடத் தகவல்களை நிர்வகிப்பதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய பயனர்களின் தனியுரிமை தொடர்பாக, டிக்டாக் மற்றும் மெட்டா மீது இதைவிடப் பெரிய அபராதங்களை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Google Fined €403 Million by EU for Privacy Violations
டிரம்ப் செய்தியை ஒளிபரப்பமாட்டோம்.. அமெரிக்க ஊடகங்கள் அதிரடி முடிவு.. கோபத்தில் டிரம்ப் வைத்த CHECK!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com