3 நாட்கள் வார விடுமுறை - கூகுள் நிறுவனம் அறிவிப்பு!

3 நாட்கள் வார விடுமுறை - கூகுள் நிறுவனம் அறிவிப்பு!
3 நாட்கள் வார விடுமுறை - கூகுள் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டிலிருந்தே வேலைசெய்ய பல நிறுவனங்கள் அனுமதித்திருந்தன. ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தே வேலைசெய்து பழகிவிட்ட தொழிலாளர்களுக்கு மீட்டிங், இரவு - பகல் வேலை என்று அழுத்தம் தற்போது அதிகரித்துள்ளது. தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளார்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் வாரவிடுமுறை அளித்துள்ளது.

மேலும் இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசரவேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும், அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. 

பல நிறுவனங்களில் விடுமுறை விதிமுறைகள் கடுமையாக உள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களிடம் விடுமுறையை கோர தூண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com