கூகுள் இணை நிறுவனர் மனைவிக்கும் எனக்கும் திருமணத்தை மீறிய உறவா? - எலான் மஸ்க் மறுப்பு!

கூகுள் இணை நிறுவனர் மனைவிக்கும் எனக்கும் திருமணத்தை மீறிய உறவா? - எலான் மஸ்க் மறுப்பு!
கூகுள் இணை நிறுவனர் மனைவிக்கும் எனக்கும் திருமணத்தை மீறிய உறவா? - எலான் மஸ்க் மறுப்பு!

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரின் மனைவியுடன் தனக்கு திருமணத்தை மீறிய உறவு எதுவும் இல்லை என பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்கை பிரின் (SEGEY BRIN)இன் மனைவி நிகோல் ஷனானுடன் எலான் மஸ்க் திருமணத்தை கடந்த உறவு வைத்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த தகவலை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தனக்கும் ஷனானுக்கும் திருமணம் கடந்த உறவு உள்ளது என்ற தகவல் தவறானது என்றும் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் எலான் மஸ்க் மறுத்துள்ளார். செர்கை பிரின் தனது நண்பர் என்றும் அவரது மனைவி நிகோல் ஷனானை கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே இருவரும் சந்தித்திருப்பதாகவும் இதில் காதல் எதுவும் இல்லை என்றும் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

செர்கை பிரின்னிடம் இருந்து அவரது மனைவி நிகோல் ஷனான் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து கோரியிருந்தார். உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருப்பதும் செர்கை பிரின் 8ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com