"இது இந்தியாவின் மகத்தான வெற்றி"- சுந்தர் பிச்சை!

"இது இந்தியாவின் மகத்தான வெற்றி"- சுந்தர் பிச்சை!
"இது இந்தியாவின் மகத்தான வெற்றி"- சுந்தர் பிச்சை!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இது ஒரு மகத்தான வெற்றி என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசிப் போட்டியை இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் கில், பன்ட், புஜாரா ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியை சாதகமாக்கினர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை "டெஸ்ட் தொடர் வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இந்த வெற்றி மகத்தானது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த டெஸ்ட் தொடர் அபாரமானது" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com