உலகம்
"இணைய சுதந்திரம் உலக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகிறது"-கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கவலை
"இணைய சுதந்திரம் உலக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகிறது"-கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கவலை
உலக அளவில் இணைய சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது சீனாவில் இருப்பது போன்று கட்டுப்பாடுகள் நிறைந்த இணைய சேவை அதிகரித்து வருகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இணைய சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக கூறினார். சீனாவில் கூகுள் தயாரிப்புகள் எதுவும் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.