சர்ச்சை அறிக்கை: விடுப்பை ரத்து செய்தார் சுந்தர் பிச்சை
தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள் என்று கூகுளின் மூத்த பொறியாளர் ஒருவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.
பொறியாளர் பதிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் அவர், அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அறிக்கையை எழுதிய பொறியாளர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் அதை எழுதியவர் யார் என்பது குறித்து கூகுள் நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறுவனத்துக்குள் கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சிலர் இந்த பதிவையிட்ட பொறியாளரைப் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

