கூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ!

கூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ!

கூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ!
Published on

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், தனது 20-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபாபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது. 

கூகுளின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வே‌லைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் டூடுலை வெளியிட்டுள்ளது. இறுதியாக ரஷ்ய, ஸ்பானிஷ், ஜப்பானிய, சீன உள்ளிட்ட பல மொழிகளில் பயனர்களுக்கு நன்றி தெரிவித்து முற்றிலும் அனிமேஷனால் கண்கவரும் வடிவத்தில் முடித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com