\
GOLD
GOLDREUTERS

தாறுமாறாக எகிறப்போகும் தங்கம் விலை! 46% வரை உயருமா? அதிர்ச்சி தரும் வல்லுநர்களின் கணிப்பு!

தீபாவளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள தங்கத்தின் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 46 சதவீதம் வரை உயரக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published on: 
Summary

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,129 டாலர்களாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் 6,000 டாலர்களை எட்டும் என நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன. உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் விலை உயர்வுக்கு காரணமாகும்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

தீபாவளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள தங்கத்தின் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 46 சதவீதம் வரை உயரக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,000 டாலர்களை எட்டும் என நிதி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அப்படியானால், தங்கத்தின் விலை எந்த அளவுக்கு உயரப்போகிறது? இதற்கான காரணம் என்ன? தற்போது பார்க்கலாம்.

GOLD
GOLDREUTERS

பொதுவாக, சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில், கடந்த சில வாரங்களாகச் சரிவையும் சந்தித்தது. இதனால், விலை குறைந்தபோது தங்கம் வாங்குவதற்காகக் காத்திருந்த பலரும் மீண்டும் கொள்முதலில் ஈடுபட்டனர். இப்படியான சூழ்நிலையில், தீபாவளிக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நவம்பர் 9ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,129 டாலர்களாக உயர்ந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 3.73 லட்சம் ரூபாயாகும். இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தங்கம் சுமார் 1,44,760 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் சுமார் 1,32,697 ரூபாயாகவும் இருந்தது.

இப்படியான சூழ்நிலையில்தான், அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான JP Morgan வெளியிட்டுள்ள தங்கத்தின் விலை குறித்த கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,000 டாலர்களை எட்டக்கூடும் என அந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 5.42 லட்சம் ரூபாயாக இருக்கும். அதாவது, நவம்பர் 9ஆம் தேதி நிலவிய 4,129 டாலர்கள் என்ற விலையுடன் ஒப்பிடும்போது, இது சுமார் 46 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவது, சர்வதேசப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்புவது போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என JP Morgan தெரிவித்துள்ளது.

Defying predictions the price of gold continues to rise
price of gold continues to riseReuters

மேலும், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது, அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைவது மற்றும் அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் குறைவது போன்ற காரணிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சர்வதேசக் காரணிகள் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை 46 சதவீதம் வரை உயரும் என்பாதை உறுதியாக கூறமுடியாது. இது தற்போதைய சந்தை நிலவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கணிப்பு மட்டுமே. சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் டாலரின் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

GOLD
அமெரிக்க தேர்தல் எதிரொலி; எகிறும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.2,280 உயர்வு!
GOLD
அபார வீழ்ச்சியில் தங்கம்! ஒரு சவரன் இவ்வளவு தானா? தீபாவளிக்கு டபுள் ட்ரீட்!