உலகின் மக்கள்தொகை 826 கோடி.. எந்த வயது பிரிவினர் எவ்வளவு உள்ளனர்?
உலகின் மக்கள் தொகை சுமார் 826 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதில் எந்தெந்த வயதுப் பிரிவினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர் என்ற ஒருபுள்ளி விவரத்தை காணலாம்
உலகின் மக்கள் தொகை சுமார் 826 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதில் எந்தெந்த வயதுப் பிரிவினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர் என்ற ஒருபுள்ளி விவரத்தை காணலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதாவது சைலன்ட் ஜெனரேஷன் என அழைக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 16.7 கோடியாக உள்ளது. உலக மக்கள்தொகையில் இவர்கள் 2 % மட்டுமே உள்ளனர். 61 முதல் 79 வயதுள்ளவர்கள் அதாவது பேபி பூமர்கள் எண்ணிக்கை 110 கோடி எனத் தெரியவந்துள்ளது.
மக்கள்தொகையில் இவர்கள் பங்கு 12.8% ஆக உள்ளது. 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் ஜெனரேஷன் எக்ஸ் பிரிவினர் 140 கோடிபேர் உள்ளனர். மக்கள்தொகையில் இவர்கள் பங்கு 16.7%. 29 முதல் 44 வயதுக்குட்பட்ட மில்லினியல்ஸ் ஜென்ஒய் பிரிவினர் 170 கோடி பேர் உள்ளனர். மக்கள்தொகையில் இவ்வயது பிரிவினரின் பங்கு 21.2% ஆக உள்ளது. 13 முதல் 28 வயதுக்குள் உள்ள ஜெனரேஷன் இசட் பிரிவினர் எண்ணிக்கை 190 கோடியாக இருக்கிறது. உலகில் 22.9% பேர் இவ்வயது பிரிவினராவர். 12 வயதுக்கு கீழான ஜெனரேஷன் ஆல்ஃபா வயது பிரிவினர் எண்ணிக்கை 200 கோடியாக உள்ளது. 24.4% பங்களிப்புடன் இவ்வயது பிரிவினர் உலகிலேயே அதிகளவு உள்ளனர்.

