கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் பலவிதம்., துடைப்பத்தை ஒழித்து வைப்பது முதல் சிலந்தி வலை வரை.!
ஆஸ்திரியாவில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நேர்மாறாக, குறும்பு செய்யும் குழந்தைகளைத் தண்டிக்க 'க்ராம்பஸ்' (Krampus) என்ற பயங்கரமான அரக்க உருவம் வீதிகளில் உலா வரும்.
ஜப்பானில் கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்தோடு கெ.எஃப்.சி (KFC) வறுத்த கோழியை உண்பது என்பது அங்குள்ள கிறிஸ்தவர்களிடையே ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்டது.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரத்தில் மறைத்து வைக்கப்படும் பொம்மையை முதலில் கண்டுபிடிக்கும் குழந்தைக்குச் சிறப்புப் பரிசு உண்டு.
நார்வேயில் தீய சக்திகள் மற்றும் சூனியக்காரிகளிடமிருந்து தப்பிக்க, கிறிஸ்துமஸ் இரவில் வீட்டின் துடைப்பங்களை மக்கள் மறைத்து வைப்பார்கள்.
வெனிசுலாவின் கராகஸ் நகரில் கிறிஸ்துமஸ் காலையில் மக்கள் ஸ்கேட்டிங் செய்துகொண்டே தேவாலயத்துக்குச் செல்வார்கள்; இதற்காகச் சாலைப் போக்குவரத்து மூடப்படும்.
உக்ரைனில் கிறிஸ்துமஸ் மரத்தைச் சிலந்தி வலைகள் போன்ற அலங்காரங்களால் மூடுவார்கள். இது ஒரு ஏழைப் பெண்ணின் மரத்தைச் சிலந்தி தன் வலையால் அழகாக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டது.
ஐஸ்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு முன் புதிய ஆடைகள் உடுத்தாதவர்களை ஒரு ராட்சதப் பூனை பிடித்துச் சென்றுவிடும் என்ற நாட்டுப்புறக் கதை அங்கு பிரபலம்.
கனடா நாட்டின் தபால் துறை கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்காக பிரத்யேக அஞ்சல் குறியீட்டை வைத்துள்ளது. இதிலிருந்து குழந்தைகளுக்கு வரும் பதில்கள் நெகிழ்ச்சியானவை.

