புலிக்குட்டியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற சிறுமி.! வைரல் வீடியோ!

புலிக்குட்டியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற சிறுமி.! வைரல் வீடியோ!
புலிக்குட்டியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற சிறுமி.! வைரல் வீடியோ!

மெக்சிகோவில் சிறுமி ஒருவர் புலியை அழைத்துக்கொண்டு நடைபயிற்சி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஆடு, மாடு, கோழி, பூனை, முயல், கிளி, நாய் என பல்வேறு விலங்குகள், பறவைகள் வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம். அதிலும் சிலர் தினமும் காலை, மாலை என நாயை வாக்கிங் கூட்டிச்செல்வதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள்.

ஆனால் ஒரு சிறுமி நாயை வாக்கிங் கூட்டிச்செல்வது போல், புலிக் குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குவாசேவ் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், வீட்டில் நாய், பூனை வளர்ப்பது போன்று புலிக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் புலிக்குட்டியின் கழுத்தில் கயிறு மற்றும் பெல்ட் அணிவித்து அதனை வாக்கிங் அழைத்து சென்றது சாலையில் சென்றவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இதை காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com