அமெரிக்காவில் நாயை சுடுவதற்கு பதில் காவல்துறையினர் மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நகர போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு வாசி தான் வளர்க்கும் நாயை சாலையில் அழைத்து வந்துள்ளார். திடீரென, நாய் போலீசார் மீது பாய்ந்து ஒரு போலீசின் காலை கடித்து குதறியது. நாயை கூட்டிவந்தவர் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் சட்டென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை குறிவைத்து சுட்டனர். ஆனால், குறிதவறி அவ்வழியாக வந்த பள்ளி மாணவி மீது குண்டு பாய்ந்தது. மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நகர போலீசார், நடந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தது என கூறினர்.