girl 15 shot dead by father over tiktok videos in pakistan
model imagefreepik

பாகிஸ்தான் | டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட 15 வயது சிறுமி.. தந்தை செய்த கொடூரம்! பறிபோன உயிர்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது சிறுமி, அவருடைய தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான குவெட்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பம், கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளது. அந்தக் குடும்பத்தில் 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். அவருக்கு டிக்டாக் செயலியில் அடிக்கடி வீடியோ போடுவதை விருப்பமாக வைத்துள்ளார். ஆனால், இதை நிறுத்துமாறு மிகப் பழமைவாதியான அவரது தந்தை கண்டித்துள்ளார். ஆனாலும், அந்தச் சிறுமி தந்தையின் பேச்சைக் கேட்கவில்லை.

இதனால் கோபத்தில் இருந்த அந்த தந்தை, மகளைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, அவர் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானின் சொந்த ஊரான குவெட்டாவுக்கு வந்திருந்தனர். அப்போதும் சிறுமியிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை எனக் கூற்ப்படுகிறது. இதனால் கோபம் தணியாத தந்தையும், சிறுமியின் தாய் மாமாவும் திட்டமிட்டு அந்தச் சிறுமியைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

girl 15 shot dead by father over tiktok videos in pakistan
model imagefreepik

கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் தந்தை ஆரம்பத்தில் தங்கள் வீட்டிற்கு வெளியே வான்வழி துப்பாக்கிச் சூட்டின்போது, தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் மகள் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் விசாரணையில் தனது மகள் டிக் டாக் வீடியோ போடுவதை நிறுத்தாததால், அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை செய்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குவெட்டா பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

241 மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தானில் 54 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் TikTokஐப் பயன்படுத்துகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் வீடியோ பகிர்வு செயலியை உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதால் அரசாங்கம் பலமுறை தடை செய்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகம் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கெளரவக் கொலை செய்யப்படுகின்றனர். வீட்டைவிட்டுச் செல்வது, சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவது, பழமைவாத மதிப்புகளுக்கு எதிரான செயல்பாடு உள்ளிட்ட நடைமுறைகளுக்காக பாகிஸ்தானில் கெளரவக் கொலை நடப்பதாக அது தெரிவித்துள்ளது.

girl 15 shot dead by father over tiktok videos in pakistan
டிக் டாக் மோகம்: விபரீதத்தில் முடியும் Boat jumping சேலஞ்ச்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com