திருமணத்துக்கு முன் என்ன பேச்சு? வருங்கால கணவருடன் பேசிய மணமகள் சுட்டுக்கொலை!

திருமணத்துக்கு முன் என்ன பேச்சு? வருங்கால கணவருடன் பேசிய மணமகள் சுட்டுக்கொலை!

திருமணத்துக்கு முன் என்ன பேச்சு? வருங்கால கணவருடன் பேசிய மணமகள் சுட்டுக்கொலை!
Published on

திருமணத்துக்கு முன், வருங்கால கணவருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணும் வருங்கால கணவரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது கோட்கி நகரம். இதன் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் நஸீரன். இளம் பெண்ணான இவருக்கும் வாயி வாஹி கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் என்பவருக்கும் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் நஸீரன், வருங்கால கணவருடன் பேசிக்கொண்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு இது போல, நஸீரனும் ஷாகித்தும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட அவரது மாமா, கோபமடைந்தார். திருமணத்துக்கு முன் என்ன பேச்சு? என்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் நஸீரனையும் பிறகு ஷாகித்தையும் சுட்டுக்கொன்றார்.

இது தொடர்பாக அவரையும் அவர் உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com