லிஃப்டில் சிக்கித் தவித்த சிறுவன்; புலியாக பாய்ந்து காப்பாற்றிய சிறுமி

லிஃப்டில் சிக்கித் தவித்த சிறுவன்; புலியாக பாய்ந்து காப்பாற்றிய சிறுமி
லிஃப்டில் சிக்கித் தவித்த சிறுவன்; புலியாக பாய்ந்து காப்பாற்றிய சிறுமி

துருக்கியில் லிஃப்டிற்குள் சிக்கிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்டிற்குள் சிறுவர்கள் 3 பேர் உள்ளே நுழைகின்றனர். அதில் ஒரு சிறுவன் தன் கழுத்தில் கயிற்றில் சுற்றியபடியே நின்றுள்ளான்.அந்தக் கயிறு பாதி லிஃப்டிற்கும் வெளியே இருந்துள்ளது. இதனை அறியாமல் லிஃப்டை சிறுமி இயக்கியதும் கயிறும் சேர்ந்து மேல் நோக்கிச் செல்ல சிறுவன் தூக்கில் மாட்டியவாறு மேல் நோக்கி இழுக்கப்பட்டான். 

சிறுவனின் அலறல் கேட்டு துரிதமாக செயல்பட்ட சிறுமி , சிறுவனின் கழுத்து இறுகாமல் அவனை அப்படியே தூக்கிவாறே லிஃப்டின் அவசர மணியை அழுத்தினார். உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. இதனால் சிறுவன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.

லிஃப்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் இந்தக் காட்சி தெரியவர அந்தச் சிறுமிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com