இங்கிலாந்துமுகநூல்
உலகம்
இங்கிலாந்து | திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்தில் மக்கள்!
இங்கிலாந்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெற்கு இங்கிலாந்தில் உள்ள காட்ஸ்டோன் என்ற கிராமத்தில் சாலையில் 20 மீட்டர் அளவிற்கு குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
அப்பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவே இதற்கு காரணமென தெரிவித்த அதிகாரிகள், சேதமடைந்த குழாயை சீரமைக்கும் பணி தொடர்வதாக கூறினர். திடீர் பள்ளத்தால் ஒரு வீட்டின் தோட்டம் மற்றும் சாலை கடுமையாக சேதமடைந்தன.