germanys president dissolves parliament
ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர்எக்ஸ் தளம்

ஜெர்மனி | நாடாளுமன்றம் கலைப்பு.. பிப்ரவரியில் தேர்தல்.. அதிபர் உத்தரவு!

ஜெர்மனியில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Published on

ஜெர்மனியில் தி கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சோஷியல் ஜனநாயகக் கட்சி ஆட்சியமைத்தது. ஆளுங்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுதந்திர ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றதால் அரசியல் குழப்பம் நீடித்தது. இந்தச் சூழலில், கடந்த வாரம், பிரதமர் ஸ்கோல்சுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 394 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து, தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பிரதமர் பதவியில் இருந்து ஓலாஃப் ஸ்கோல்ஸ் விலகும் நிலை ஏற்பட்டது. ஆட்சி கலைப்பு தொடர்பான அறிவிப்பை அதிபர் ஃப்ராங்க் ஸ்டீன்மியர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பிறகு வெளியிடுவார் எனக் கூறப்பட்டது.

germanys president dissolves parliament
ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர்

இந்த நிலையில், ஜெர்மனியில் இன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ள அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி புதிய தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், “தற்போதைக்கு நல்ல திறன் கொண்ட அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நம்பகமான பெரும்பான்மை தேவைப்படுகிறது. இதன்காரணமாக தேர்தலை முன்கூட்டி நடத்தவுள்ளோம். தேர்தலுக்குப் பிறகு, சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும். தேர்தல் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

germanys president dissolves parliament
ஜெர்மனி | பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. விரைவில் தேர்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com