ஜெர்மனியில் விற்பனையாகும் மை ஃப்ரண்ட் கைலா (My Friend Cayla) என்ற பெயரில் விற்கப்படும் பொம்மைகள் உளவு வேலைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த பொம்மையில் உள்ள மைக் மூலம் குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் இணையத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த பொம்மை, அதனிடம் கேட்கப்படும் கேள்விக்கான பதிலை இணையத்தின் உதவியுடன் அளிக்கும். இந்த வசதியைப் பயன்படுத்தி குடும்பங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று அளித்த புகாரை விசாரித்த ஜெர்மனி தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அந்த வகை பொம்மைகளில் இருக்கும் மைக்கை உடனடியாக அகற்றும்படி பெற்றொர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.