ஜெர்மனி | பூங்காவில் நுழைந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது கத்திக்குத்து.. குழந்தை உள்பட 2 பேர் பலி!
ஜெர்மனியில் பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலி!
ஜெர்மனியில் அஷாஃபென்பர்க் நகரில் உள்ள ஸ்கோயென்டல் பூங்காவிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் குழந்தை உள்பட இருவர் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் காவல்
துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 28 வயதான இளைஞரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கு பின்னால் மதம் தொடர்பான பின்னணி இல்லை எனவும் ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் மாக்ட்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் புகுந்து 6 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மருத்துவர்
கைது செய்யப்பட்டிருந்தார்.