கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவிற்கு ஆதரவாக ஜெர்மன் கருத்து

கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவிற்கு ஆதரவாக ஜெர்மன் கருத்து
கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவிற்கு ஆதரவாக ஜெர்மன் கருத்து

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கக்கோரி இந்தியாவை ஒருபோதும் வற்புறுத்தமாட்டோம் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.டெல்லியில் ஜெர்மனியின் தூதர் வால்டர் ஜே லிண்டர் இதைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை நம்பியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் எப்போது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவார் எனத் தெரியாது என்று கூறியுள்ள ஜெர்மன் தூதர், தங்கள் நாடு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை கணிசமாக குறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிற்கு தனிப்பட்ட பிரச்னைகள், சூழல்கள் இருக்கும் எனத் தெரிவித்த லிண்டர், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக இந்தியாவை ஒருபோதும் வற்புறுத்த மாட்டோம் எனத் தெரிவித்தார். பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக ஜெர்மனி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com