60 விநாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை உடைத்து 63 வயது முதியவர் கின்னஸ் சாதனை!

60 விநாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை உடைத்து 63 வயது முதியவர் கின்னஸ் சாதனை!
60 விநாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை உடைத்து 63 வயது முதியவர் கின்னஸ் சாதனை!

ஜெர்மனியைச் சேர்ந்த 63 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் 60 விநாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை தமது கைகளாலேயே உடைத்து கின்ன்ஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 63 வயது நிரம்பிய தற்காப்பு கலைஞர் முகமது கஹ்ரிமனோவிக். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது கைகளாலேயே 148 தேங்காய்களை உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்ததன் மூலம் “சுத்தியல் கரங்கள் கொண்டவர்” (Hammer hands) என்று வர்ணிக்கப்படுகிறார். இந்நிலையில் தற்போது மற்றுமொரு வித்தியாசமான உலக சாதனை ஒன்றையும் இவர் படைத்துள்ளார்.



இரு கரங்களால் ஒரு பேஸ்பால் மட்டையை உடைப்பதே மிகக் கடினமான காரியமாகும். ஆனால் இந்த முதியவர் கிட்டத்தட்ட 68 பேஸ்பால் மட்டைகளை வெறும் 60 விநாடிகளுக்குள் தமது கைகளால் உடைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

முன்னதாக 60 விநாடிகளில் 55 மட்டைகளை உடைத்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில், அதைவிட 13 மட்டைகளை அதிகமாக உடைத்து முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார் முதியவர் முகமது கஹ்ரிமனோவிக்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com