\
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்
Published on

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்; அவருக்கு வயது 94. 

அமெரிக்காவின் 41-வது அதிபராக கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 1993-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். அத்துடன் 43-வது துணை அதிபராகவும் பதவி வகித்துள்ளார். 94 வயதான இவர் காலமாகிவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷிற்கு 5 குழந்தைகள் மற்றும் 17 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவரின் மனைவியான பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com