ஜப்பானியர்களை கவர்ந்த ’அய்’ சிம்பன்சி.. 49ஆவது வயதில் மரணம்!
ஜப்பானில் மனிதர்களுக்கு இணையான அறிவுத்திறன் கொண்டதாகக் கருதப்பட்ட அய் (Ai) என்ற புகழ்பெற்ற சிம்பன்சி தனது 49ஆவது வயதில் காலமானது.
ஜப்பானில் மனிதர்களுக்கு இணையான அறிவுத்திறன் கொண்டதாகக் கருதப்பட்ட அய் (Ai) என்ற புகழ்பெற்ற சிம்பன்சி தனது 49ஆவது வயதில் காலமானது. 'அய்' சிம்பன்சியால் 100-க்கும் மேற்பட்ட சீன எழுத்துகள் மற்றும் ஆங்கில நெடுங்கணக்குகளை அடையாளம் காண முடியும். பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்கள், 11 நிறங்களையும் துல்லியமாக இனம்காண முடியும். கணினித் திரையில் பல வண்ணங்களில் ஓவியம் தீட்டுதல், ஆப்பிள் போன்ற பொருட்களின் வடிவங்களை டிஜிட்டல் திரையில் வரைவதிலும் 'அய்' கில்லாடியாக இருந்தது.
ஜப்பானிய மொழியில் 'அய்' என்றால் 'அன்பு' என்று பொருளாகும். 1977ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்திற்கு இந்த் ’அய்’ கொண்டுவரப்பட்டது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றல் குறித்த ஆய்வுகளுக்கு இந்த சிம்பன்சி பெரும் பங்களிப்பை தந்துள்ளது. வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த வெள்ளியன்று அய் உயிரிழந்ததாக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2000ஆம் ஆண்டில், அய் சிம்பன்சிக்கு அயூமு என்ற ஆண் சிம்பன்சி பிறந்தது. அதுவும் அற்புதமான நினைவாற்றலைப் பெற்றிருந்தது. அதேநேரத்தில், அய் என்ற அன்பு, விட்டுச்சென்ற நினைவுகளுக்கு அழிவில்லை.

