பதற்றம்.. பயம்.. Gaza-வை குறிவைத்தது உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்

மத்திய கிழக்கு கடற்பகுதியில் காசாவை குறிவைத்து உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையில் அர்ப்பணிக்கப்பட்ட ஜெரால்ட் ஆர்.ஃபோர்டு போர்க்கப்பல் தற்போது இஸ்ரேல் படைக்கு உதவ விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கடற்படை வீரரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜெரால்ட் ஆர்.ஃபோர்ட் பெயரை தாங்கிய இந்தக் கப்பல் உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட போர்க்கப்பல்களில் மிகவும் பெரியது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஜெரால்ட் கப்பலில் 4 ஆயிரத்து 500 போர் வீரர்கள் செல்ல முடியும். 90 போர் விமானங்களை நிறுத்த முடியும். குறிப்பாக அதிநவீன போர்விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் இந்தக்கப்பலில் நிறுத்த முடியும் என்றும் அமெரிக்க கப்பல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்தது ஜெரால்ட் போர்க்கப்பல். அணுசக்தி மூலம் இயங்கும் இரண்டு எஞ்ஜின்களே கப்பல் வேகமாக செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com