GAZA
GAZAPTI

இஸ்ரேலின் செயலால் உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் காஸா மக்கள்!

காஸா பகுதி மீது இடைவிடாது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு பணயக் கைதிகளாக உள்ள 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.
Published on

காஸா மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் இஸ்ரேல் காஸாவுக்குள் அடிப்படை தேவைகளான
உணவு மருந்து உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதை தடுத்துள்ளது. மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளையும் உள்ளே அனுமதிக்காததால் காஸா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

GAZA
150 பேரை பிணைய கைதிகளாக பிடித்த ஹமாஸ்… இஸ்ரேல் புகார்!
GAZA
GAZAPTI

"பணயக் கைதிகள் அனைவரும் வீடு திரும்பும் வரை காஸாவில் ஒரு மின்சார விளக்கும் எரியாது, ஒரு குழாயிலும் தண்ணீர் வராது, ஒரு எரிபொருள் வாகனம் கூட உள்ளே நுழைய முடியாது" என இஸ்ரேலில் எரிசக்தித்துறை அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எகிப்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை வீசப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

GAZA
GAZAPTI

ஒருவேளை இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பதற்காக ஹமாஸ் படையினர், தங்களது ஏவுகணைகளை சேமித்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com