ஜெருசலேமில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் காசாவில் போர்நிறுத்தம்: ஹமாஸ்

ஜெருசலேமில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் காசாவில் போர்நிறுத்தம்: ஹமாஸ்
ஜெருசலேமில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் காசாவில் போர்நிறுத்தம்: ஹமாஸ்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் அமைதியும், ஸ்திரத்தன்மையும் திரும்பும் என ஹமாஸ் இயக்கம் அறிவித்திருக்கிறது.

எகிப்தை சேர்ந்த சமாதானக்குழு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இருதரப்பும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்வது குறித்தும் பேசப்பட்டது.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக மே 10 அன்று ஹமாஸ் அமைப்பு ஜெருசலேமில் ராக்கெட்டுகளை வீசி தாக்கியது.ந்த சண்டையின்போது இஸ்ரேலிய நகரங்களை நோக்கி 4,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் வீசியது. அதே நேரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் 1,000 இலக்குகளை தாக்கின. இதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 8500 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் ஆட்சி செய்யும் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் மற்றும் இப்பிரதேசத்தின் சில பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. அதன்பின்னர் மே 21-லிருந்து 11 நாட்கள் இருதரப்பும் போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர்,காசா மற்றும் ஜெருசலேம் ஆகிய இரு நகரங்களிலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். காசா, ஜெருசலேம், ஷேக் ஜார்ரா மற்றும் பாலஸ்தீனம் முழுவதிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டியது கட்டாயம். இது நடந்தால், அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பக்கூடும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com